Tuesday, December 28, 2010

கோங்கூரா சட்னி !

.
.
கொஞ்சம் ஆந்திர அரசியலை ஸ்னாப்ஷாட் வடிவில் கொடுக்கிறேன்.



* தற்போதைய முதல்வர் கிரண்குமார் ரெட்டிக்கு (முன்னாள் ஸ்பீக்கர்) ஒழுங்காக தெலுங்கு பேசவே தெரியாது.

* தெலுங்கானாவுக்கான கிருஷ்ணா கமிஷன் ரிப்போர்ட் டிசம்பர் 31 ஆம் தேதி மத்திய அரசிடம் ஒப்படைக்கப்படவுள்ளது. முடிவு சாதகமாக இருந்தால் 2011 இல் தெலுங்கானா பிறக்கும்.



* சிரஞ்சீவிக்கு மக்கள் ஆதரவில்லை. அவர் நமது கேப்டன் விஜயகாந்தை போல ஓட்டை பிரிக்கும் வேலையை மட்டும் செய்துவருகிறார்.



* ஜகன்மோகன் ரெட்டி காங்கிரஸை பெரிய அளவில் கூறுபோடவில்லையென்றாலும், சிரஞ்சீவி போல (20 ~ 30) எம்.எல்.ஏக்களை பெறும் அளவுக்கு செல்வாக்கு பெற்றவராக உள்ளார். இது காங்கிரசுக்கு ஆப்பு.

* கடந்த தேர்தலில் சிரஞ்சீவி தெலுங்கு தேசத்தின் ஓட்டுக்களை பிரித்ததில் காங்கிரஸ் வெற்றிபெற்றது ( சுமார் 1 ~ 2 சதம்). நம்மூர் கேப்டன் கதை அங்கேயும்.



* தெலுங்கு தேசத்தின் ஓட்டு வங்கி அப்படியே உள்ளது. அதனால் மீண்டும் சந்திரபாபு நாயுடுவுக்கு வாய்ப்பு உண்டு.



* தல்லி தெலுங்கானா என்று ஆரம்பித்து கல்லா கட்ட நினைத்த விஜயசாந்தி, விஜய பூந்தியாகிவிட்டார்.



* தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ், தெலுங்கானா அமைந்தால் கட்சியை காங்கிரஸில் இணைப்பதாக அறிவித்து காங்கிரசுக்கு மேலும் அழுத்தம் கொடுத்துள்ளார்.

* ஜனவரியில் மிகப்பெரிய வன்முறை வெறியாட்டம் ஐதராபாத்தில் நடக்கலாம் என்று பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் எதிர்பார்த்துள்ளார்கள்.

பதிவில் தகவல் பிழை இருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டவும்...!!!

!!!

5 comments:

பழமைபேசி said...

சரிங்க; அப்படியே, தமிழ்நாட்டு அவியலையும் அவிச்சி வையுங்க!!

உமர் | Umar said...

//தமிழ்நாட்டு அவியலையும்//

அவியல் கேரள உணவு அல்லவா?

'பரிவை' சே.குமார் said...

நல்லாத்தான் அவிச்சிருக்கீங்க அரசியலை.

ரவி said...

தை பிறந்தால் அவிக்கலாம் பழமையாரே..

ரவி said...

அவியல் கேரள உணவு அல்ல. தமிழக உணவே !!! அடை அவியல்.

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....