Thursday, March 19, 2009

செஞ்சியாருடன் அல்ப்போன்ஸு - EPISODE 3

செஞ்சி ராமச்சந்திரன் அப்போது எந்த கட்சீயில் இருந்தார் என்று தெரியவில்லை...ஆனால் ஒரு எலக்ஷன் வந்து அவர் எங்கள் ஏரியாவில் பிரசாரம் செய்வதாக கேள்விப்பட்டிருந்தேன்...

நாடார் கடைப்பக்கம் புகைக்கப்போன இடத்தில்...

"ரவி கொஞ்சம் கடைய பாத்துக்கோ, வீடு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்" என்று நாடார் கடையை என்னிடம் விட்டுவிட்டு போய்விட்டார்..

சைலன்ஸ்ர் இல்லாத டிவிஎஸ் பிப்டி ஒன்று வரும் சத்தம் கேட்டது...

வேறு யார்...

அல்ப்போன்ஸுதான்...

அப்போதெல்லாம் டீச்சர் டிரெயினிங் டிப்ளமோ படித்துவிட்டு, அரசாங்க ஊ.ஒ.து. பள்ளிகளில் வேலைக்கான உத்தரவை எதிர்பார்த்து காத்திருந்தான் அல்ப்போன்ஸு...

"டேய், ஒரு தம்மு எடுடா" என்று அதிகாரக்குரல் எழுப்பினான்...

"நாடார் கடன்ல எதுவும் குடுக்கவேணாம்னு சொல்லியிருக்கார்...காசு இருக்கா"

"டேய், நீயும் நானும் அப்படியா பழகினோம் ? எங்கிட்ட ஏதுடா காசு ?.."

"பிலீஸ் கிவ் மி கோல்ட் பில்டர்"...

"நாயே, கடன் கேட்டாலும் பட்லர் இங்கிலீஷுக்கு ஒன்னும் குறைச்சல் இல்ல..."

திட்டிக்கொண்டே ஒரு சிகரெட்டையும் தீப்பெட்டியையும் எடுத்து கொடுத்தேன்...

"டேய் என்னடா சத்தம் ?"

ஒன்னுமில்லடா அல்போன்ஸு...செஞ்சியார் வராரு...

என்னது, எம்ஜியாரா ? அவரு இன்னும் சாகலையா ?

நாயே...அது எம்ஜியார். இது செஞ்சியார்...சிட்டிங் எம்பிடா...

சிட்டிங்ல ஏன் எம்புறாரு, ஸ்டேண்டிங்ல எம்பச்சொல்லு, நல்லா உயரம் உயரமா குதிக்கலாம்...ஹி ஹி என்று உண்மையிலேயே சீரியசாக சிரிக்கிறான் அல்ப்போன்ஸு...

அப்போது சில பல ஜீப்புகளின் சர சர சத்தமும், பிரச்சார மைக் செட் அலறும் சத்தமும் கேட்டது...

பொதுவாக எந்த அரசியல் தலைவரும் ஐநூறு ஓட்டு உள்ள எங்கள் தெரு வழியாக வருவது குறைவு...

வழி தவறி யாராவது வருவது உண்டு...

அப்படி ஏதும் நடந்திட்டதோ என்று ஆச்சர்யமாக கடையின் அரைக்கா மரத்தடுப்பை தூக்கி வெளியே வர எத்தனித்தேன்...

அப்போது அல்ப்போன்ஸும் சிகரெட்டை பத்தவைத்திருந்தான்...அவனும் இந்த இரைச்சலை கேட்டு சாலையை நோக்கியிருந்தான்..

அதற்குள் எங்கள் கடையை செஞ்சியாரின் பிரச்சார வேன் வந்தடைந்திருந்தது...

உள்ளே இருந்து செஞ்சியார் எழுந்து, நின்றுகொண்டிருந்த அல்ப்போன்ஸை நோக்கி கும்பிட்டார்..

இவன் அவரை பார்க்காமல்...என்னை நோக்கி திரும்பி...

இந்த காஞ்ச கருவாடா செஞ்சியாருன்னு சொன்ன ? என்றான்...

வண்டியை எடுப்பா...என்று..செஞ்சியார் போய்விட்டார்...காதில் விழுந்திருக்கும் என்று நினைக்கிறேன்...

ஏண்டா டாபரு, ஒரு பெரிய மனுசன் கும்பிட்டா திரும்பி கும்பிடலாமேடா...

என் கையில தான் சிகரெட் இருக்கில்ல...சிகரெட்டோட எப்படிடா கும்பிடறது ? அது மரியாதை குறைவில்லையா ?

செஞ்சியார் தேர்தலில் ஜெயித்து எம்பியானார்...

அதன் பிறகு தொகுதிப்பக்கம் வந்ததாகவோ, பார்லிமெண்டில் பேசியதாகவோ..அட்லீஸ்ட் ஒரு நிழற்குடை கட்டித்தந்ததாகவோ..சத்தியமாக நினைவில்லை...

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு...

நானும் அல்ப்போன்ஸும் ஒரு குட்டிச்சுவரில் உட்கார்ந்திருந்தோம்...

அவனுடைய டீச்சர் டிரெயினிங் கால்பார் ஆகியிருந்தது...யாரோ ஒருவரிடம் சிபாரிசுக்காக போகவேண்டும் என்று அவனுடைய தந்தையார் சொல்லியிருந்தார்...

அவனும் பேண்ட் சட்டையிலேயே என்னுடன் அமர்ந்திருந்தான்...

அவனுடைய அப்பா வண்டியில் வந்தார்...

டேய் அல்ப்போன்ஸு...போலாமா ? என்றார்...

என்னுடன் பேசிக்கொண்டிருந்தவன்...சரிடா அப்ப நான் கிளம்பறேன்...

என்னடா ரவி, அரியர்ஸ் பாஸ் ஆகிட்டயா என்று என்னை சங்கடப்படுத்தும் ஒரு கேள்வியை கேட்டு...ஹிஹி என்று என்னுடைய சிரிப்பை பதிலாக பெற்றார் அல்ப்போன்ஸ் அப்பா...

அதற்குள் அவர் பின்னால் வண்டியில் ஏறி உட்கார்ந்துவிட்டிருந்தான் அல்ப்போன்ஸு...

மாமா...யாரை பாக்கப்போறீங்க ? வேலை கிடைச்சிருமா" என்றேன்...

செஞ்சியார்...

என்றார் அல்ப்போன்ஸ் அப்பா...

இஞ்சி தின்ற குரங்கு மூஞ்சியை அருகில் பார்த்தால் பயமில்லையே எனக்கு..அல்ப்போன்ஸ் முகம் அப்படித்தானிருந்தது...

7 comments:

ரவி said...

test

இராகவன் நைஜிரியா said...

// இஞ்சி தின்ற குரங்கு மூஞ்சியை அருகில் பார்த்தால் பயமில்லையே எனக்கு..அல்ப்போன்ஸ் முகம் அப்படித்தானிருந்தது...//

ஹி..ஹி..உங்களுக்கு தைரியம் ரொம்ப ஜாஸ்திதான்..

வால்பையன் said...

லேசாக கார்க்கியின் ந்ந்ழுமலை வாடை அடிகிறதே!
ஒருவேளை அல்போன்ஸ் மூத்தவராக இருந்தால்,
ஏழுமலைக்கு அல்போன்ஸ் வாடை அடிக்கிறதே!

ரவி said...

வாங்க ராகவன். என்ன பதிவு எதையும் கானோம் ?

graphpapersurvey said...

மிகவும் நன்று..
Spam mail களிடம் இருந்து உங்கள் mail box ஐ காப்பது எப்படி என்பதனை இங்கு பாருங்கள்
http://vinothkumarm.blogspot.com/2009/03/secure-your-mail-box-from-spams.html

BIGLE ! பிகில் said...

வணக்கம். உங்கள் பதிவு நன்றாக இருந்தது இதை தொலைபூக்கள் தளத்தில் இணைத்துள்ளோம். அல்போன்ஸ் பிளாக் அட்ரஸ் கொடுக்கவும்

பட்டாம்பூச்சி said...

//"நாடார் கடன்ல எதுவும் குடுக்கவேணாம்னு சொல்லியிருக்கார்...காசு இருக்கா" //

என்னா கடமை உணர்ச்சிப்பா.......புல்லரிக்குது :)).

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....