Wednesday, February 13, 2008

விஜயகாந்த், கலைஞர், இராமதாஸ், சரத்குமார், ஜெயலலிதா அறிக்கைகள்

கலைஞர் சொன்னாருங்கோ..

பேசுறவங்க சட்டசபைக்கு வந்து பேசுங்க...சந்து பொந்துல நின்னு பேசாதீங்க...
தமிழ் புத்தாண்டு என்று முன்பே அறிவிக்கவில்லை என்று கேட்கும் விசயகாந்தே, ஏன் நீ முன்பே கட்சி ஆரம்பிக்கவில்லை..
உடன்பிறப்புகளே, சுவரொட்டி,கட்-அவுட்,பேனர் எல்லாம் வைத்து காசை வேஸ்ட் ஆக்காதீர்கள்.

விஜயகாந்த் சொன்னாருங்கோ:

2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
என்னோட தொகுதியில் என்னுடைய தொண்டர் ஒருவரின் மரணத்துக்கு சென்ற நான் சட்டப்பேரவை தலைவருக்கு பேக்ஸ் அனுப்பினேன்..
ஏன் கட்சி ஆரம்பிக்கலைன்னு கேட்கிறீங்களே, உங்களை போன்ற அரசியல் சாணக்கியர்கள் மக்களுக்கு நல்லது செய்வீர்கள் என்று ஏமாந்தோம், அதனால் நானே கட்சி ஆரம்பித்தேன்..
எனக்கு ஆணவம் கிடையாது...
கோடான கோடி பாமரர்களில் நானும் ஒருவன்...
திமுக ஒரு கள்ள ஓட்டு கட்சி..
49.7 லட்சம் பேருக்கு வேலையில்லை...
ஒரு காலத்தில் எம்.ஜி.யாரை பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தவர் கருணாநிதி...
கலைஞர் ஏற்கனவே போட்ட கணக்கும் தவறு. இனிமேல் போடப்போகும் கணக்கும் தவறு.

ராமதாஸ்

2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
கட்-அவுட், பேனர், சுவரொட்டி வைப்பதை தடுக்க கட்சியினருக்கு அறிக்கை விட்ட கருணாநிதியை நேரில் சந்தித்து மாலை அணிவிப்பேன்..

சரத்குமார்

2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும்
பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி இல்லை என்ற எண்ணத்துடன் செயல்படுவோம்..40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்ற எண்ணத்துடன் செயல்படுவோம்
கட்சியினருக்கு பேனர் வைப்பது பற்றி முதல்வர் அறிவித்தது சந்தோஷமான செய்தி..
தொடர்ந்து நடிப்பதா வேண்டாமா என்று இன்னும் முடிவெடுக்கவில்லை..
ராதிகா என மனைவி என்ற வகையில் தான் மாநாட்டில் பேசினாரே தவிர அவர் எங்கள் கட்சியின் உறுப்பினர் அல்ல...

ஜெயலலிதா

50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் இருப்பதாக நான் சொல்லவேயில்லை...
கருணாநிதி மக்களை ஏமாற்றுகிறார், மக்களை திசை திருப்ப முயற்சி செய்கிறாரா, அல்லது உண்மையை மூடி மறைக்கிறாரா என்பதை நாட்டு மக்களுக்கு விளக்கவேண்டும்...

பி.கு: இது கும்மிக்கென்றே போட்ட பதிவு...மேலே கொடுத்திருக்கும் செய்திகள் அனைத்தும் இன்றைய பெங்களூர் தினத்தந்தியை பார்த்து டைப் செய்தேன்...(இதனால் ஆபீஸுக்கு அரைமணி நேரம் லேட்டு, பொண்டாட்டி கிட்ட திட்டு, ஹீட்டர் தண்ணி ரொம்பவே ஹீட்டு, கொடுங்க நாலு ஹிட்டு)

5 comments:

Anonymous said...

//...(இதனால் ஆபீஸுக்கு அரைமணி நேரம் லேட்டு, பொண்டாட்டி கிட்ட திட்டு, ஹீட்டர் தண்ணி ரொம்பவே ஹீட்டு, கொடுங்க நாலு ஹிட்டு)//

அதுக்கு நீ தர வேணும் நூறு ரூபா நோட்டு அப்பால ஒரு பிரியாணி தட்டு.

கருப்பன் (A) Sundar said...

பாவம் ஜெயலலிதா மட்டும் 2011ல் நமது கட்சி ஆட்சி அமைக்கும் சொல்லவில்லை போல :-(

எப்படியோ யார்வந்தாலும் மக்களுக்கு பயணுள்ள செயல்களை செஞ்சா சரி!!

ரவி said...

Yes Karuppan...only JJ and Kalaijar has not told that :))))

உண்மைத்தமிழன் said...

தம்பி.. இதை டைப் செஞ்ச நேரத்துல இணைய வேலைவாய்ப்பின் 4-ம் பாகத்தை எழுதியிருக்கலாம்..

பொழப்பை பாருப்பூ..

வால்பையன் said...

ஒரு மாநிலத்துக்கு ஒரே நேரத்தில் எத்தனை பேர் முதலமைச்சராக இருக்கலாம்.
பாவம் புள்ளைங்க ஆசபடுத்துள்ள!

வால்பையன்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www....