Posts

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups/ancestralfoods/ ) அட்மின்கள், மாடரேட்டர்கள் சார்பாக வரவேற்கிறோம். டயபட்டீஸை உங்கள் உடலில் இருந்து விரட்டி, உங்களை ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு அழைத்து செல்வதே குழுவின் நோக்கம். குழுவில் கோப்புகள் பகுதியில் மருத்துவர்கள், சீனியர்களின் அறிவுரைகள் நல்ல தமிழில் உள்ளது. உங்கள் உள்ளுறுப்புகளின் இன்ப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைத்து, உங்கள் குருதியில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க கீழ்க்கண்ட பரிந்துரைகள் கொடுக்கப்படுகிறது. என்ன என்ன உணவு சாப்பிடவேண்டும் என்பது ஆளுக்காள் மாறுபடும், ஆனால் சில பரிந்துரைகள் அனைவருக்குமானது. அவற்றை கீழே பட்டியலிடுகிறேன்.

பரிந்துரை-1
சிவராம் அண்ணாவின் உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் கண்டிப்பாக முழுமையாக படித்திருக்கவேண்டும். செல்வன் ஜி யின் பேலியோ டயட் புத்தகம் படித்திருக்கவேண்டும். மல்லிகை மகள் புத்தகத்தில் நமது குழு சீனியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகம் படித்திருக்கவேண்டும்.
----------…

இரும்பு பாத்திரத்தில் சமையல். அல்லது சமையலில் இரும்பு மீன்...

கம்போடிய மக்கள் இரும்பு சத்து குறைபாடு மற்றும் அனீமியாவில் தவித்தபோது கனடாவை சேர்ந்த ஹெல்த் ஒர்க்கர்கள் / Guelph பல்கலைகழகத்தை சேர்ந்த டாக்டர் கிறிஸ்டோபர் சார்லஸ் குறிப்பாக - அந்த ரத்த மாதிரிகளை சோதித்து இரும்பு பாத்திரம் / கேஸ்ட் அயர்ன் பாத்திரத்தில் சமையல் செய்தால் அவர்களுக்கு தேவையான இரும்பு சத்துக்கள் கிடைக்கும் என பரிந்துரைத்தார். ஆனால் இந்த முயற்சி செயல் வடிவம் பெற தடையாக இருந்தது அனைவருக்கும் பாத்திரம் கொடுப்பதற்கான பட்ஜெட். காரணம் சுமார் 60 சதவீத கம்போடிய பெண்களுக்கு பாத்திரங்கள் கொடுக்க எவ்வளவு செலவாகும் ? டாக்டர் சார்லஸ் முதலில் தாமரை வடிவத்திலான இரும்பு செய்து அதனை உணவு சமைக்கும் பாத்திரத்தில் போட்டு சமைத்தால் போதும் என கிராமத்தினரிடம் தாமரையை வழங்கினார். ஆனால் அது போதுமான வரவேற்பை பெறவில்லை. அதன் பின் கிராம பெரியவர்களிடம் உரையாடி - மீன் வடிவத்தை மக்கள் அதிஷ்டமாக கருதுவார்கள் என கண்டறிந்தார்.. அதன்பின் செப்டம்பர் 2008 முதல் பிப்ரவரி 2009 வரை சோதனை முறையில் இரும்பு மீன் கொடுக்கப்பட்டு அது சமையல் பாத்திரத்தில் போட்டு சமைக்கும்படி வலியுறுத்தப்பட்டது..அதில் ஏற்பட்ட அனுபவத்தை வ…

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால்

டயபட்டீஸ் ப்ரோட்டக்கால் டயபட்டீஸ் / நீரிழிவு / சர்க்கரை நோயை விரட்ட நியான்டர் செல்வனால் ஆரம்பிக்கப்பட்ட இந்த குழுமத்திற்கு ( https://www.facebook.com/groups/ancestralfoods/ ) அட்மின்கள், மாடரேட்டர்கள் சார்பாக வரவேற்கிறோம். டயபட்டீஸை உங்கள் உடலில் இருந்து விரட்டி, உங்களை ஆரோக்கியமான வாழ்வியல் முறைக்கு அழைத்து செல்வதே குழுவின் நோக்கம். குழுவில் கோப்புகள் பகுதியில் மருத்துவர்கள், சீனியர்களின் அறிவுரைகள் நல்ல தமிழில் உள்ளது. உங்கள் உள்ளுறுப்புகளின் இன்ப்ளமேஷன் எனப்படும் உள்காயத்தை குறைத்து, உங்கள் குருதியில் சர்க்கரை அளவு அதிகரிக்காமல் இருக்க கீழ்க்கண்ட பரிந்துரைகள் கொடுக்கப்படுகிறது. என்ன என்ன உணவு சாப்பிடவேண்டும் என்பது ஆளுக்காள் மாறுபடும், ஆனால் சில பரிந்துரைகள் அனைவருக்குமானது. அவற்றை கீழே பட்டியலிடுகிறேன்.
பரிந்துரை-1
சிவராம் அண்ணாவின் உன்னை வெல்வேன் நீரிழிவே புத்தகம் கண்டிப்பாக முழுமையாக படித்திருக்கவேண்டும். செல்வன் ஜி யின் பேலியோ டயட் புத்தகம் படித்திருக்கவேண்டும். மல்லிகை மகள் புத்தகத்தில் நமது குழு சீனியர்கள் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு புத்தகம் படித்திருக்கவேண்டும்.
------------…

எங்க தாத்தா ஒரு இன்னவேட்டர் !!

திருக்கோவிலூர் பக்கம் திருவண்ணாமலை போற வழியில பத்து கிலோமீட்டர்ல வரும் எங்க கிராமம்..மேல்கரையார்னு சொல்வாங்க அவரை..தஞ்சை பத்தூர் மேல்கரையில் இருந்து திருவண்ணாமலைக்கு குடிவந்தவர். அந்த காலத்திலேயே அப்பா (தஞ்சையில் ஹெட்மாஸ்டர்) எதிர்ப்பை மீறி காதலித்து (2 வயது மூத்த அத்தை மகளை) திருமணம் செய்தவர்..

சுகந்திர போராட்ட காலத்தில் தஞ்சை தபால் ஆபீஸ் தபால் பெட்டியில் நெருப்பை கொளுத்தி போட்டு, அதனால் தேடப்பட்ட குற்றவாளியாகி, ஜெயராஜ் <<சாதி பெயர்>> உடனே ஒப்படைக்கப்பட வேண்டும் என்று ஆங்கிலேய அரசிடம் இருந்து நோட்டீஸ் வர, இவரது தந்தையார் இவருக்கு பதில் வேறொரு ஜெயராஜை ஆஜர் படுத்தி, சிறைக்கு அனுப்ப, அவர் கடைசி காலம் வரை தியாகி பென்ஷன் வாங்கியதாக கேள்வி...

அதனால் உனக்கு சொத்து எதுவும் கிடையாது போ என்று சொன்ன அப்பாவிடம் கோபித்துக்கொண்டு திருக்கோவிலூர் வந்து, நிலம் வாங்கி செட்டில் ஆனவர்...

விவசாயம் செய்தாலும், பல தொழில்களை செய்தவர். அனைத்திலும் பெரிய வெற்றி எதுவும் அடைந்ததில்லை...

ஒரு டீமை அமைத்துக்கொண்டு சாத்தனூர் அணையில் மீன் பிடிக்க போவார். சாத்தனூர் அணையில் வலை விடும்போது அது என்னடா தூரத்…
Image
பிஷ்ஷிங்

சமீபமாக மிக அதிகமாக பிஷ்ஷிங் மின்னஞ்சல்கள் மின்னஞ்சல் பெட்டியை ரொப்புகின்றன. மீன் பிடிப்பவன் பல்வேறு தூண்டில்களை போட்டு காத்திருப்பது போல, இவர்கள் தினமும் நூற்றுக்கணக்கில் / ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல்களை அனுப்பி காத்திருக்கிறார்கள்...என்ன என்ன வருகின்றன என்று பார்த்தால் - துபாயில் ஹோட்டல் வேலை என்று ஆரம்பித்து TCS / CTS இல் தகவல் தொழில்நுட்ப பணிவாய்ப்பில் பயணித்து, க்வால்காம் / ஆப்பிள் ஷேர்களை குறைந்த விலைக்கு வாங்கலாம் என்ற அளவில்.தாய்லாந்து / இந்தோனேஷியா / பங்களாதேஷ் போன்ற நாடுகளில் முறையான கால் செண்டர்கள் கூட உண்டாம். தனி மேனேஜர் போட்டு, இளிச்சவாயர்களிடம் பணம் பிடுங்க ஜொள்ளோடு மின்னஞ்சல்கள் / பேஸ்புக் தகவல்கள் அனுப்பிவைக்கிறார்கள்..ஆகவே மக்கழே, இதுபோன்ற பிஷ்ஷிஙில் மாட்டி பணம் செலுத்தவேண்டாம். உங்கள் நிறுவனத்தின் பொருட்களை வாங்குகிறேன் என்று டுபாக்கூர் விடுபவர்களை நம்பவேண்டாம்...அந்த ஹோட்டலில் ரூம் போட்டு காத்திருக்கிறேன், வருக வருக என்று அழைப்பவர்களை நம்பி போகவேண்டாம்...படிக்காதவர்களை விட, மெத்த படித்தவர்கள் கஷ்டப்பட்டு உழைத்த பணத்தை இழந்து நிற்பதை பார்க்கையில் வேதனை தா…

உயிர்ப்பிக்கிறேன் உன்னை !!

Image
ரொம்ப நாள் கழிச்சு வலைப்பதிவில் மறுபடி நுழைகிறேன்..அவ்வப்போது ஏதாவது பத்தி எழுதும் திட்டம். பெரிதாக ஒன்றுமில்லை...

பல்ப் நெம்பர் 1:

சமீபத்தில் புதிய தோழர் ஒருவரை சந்தித்தேன்...ஈரோட்டுக்காரர்..ஸ்வீடனில் மூன்று வருடமாக இருக்கிறார்..மகளுடன் வந்திருந்தார்..யாழினி அங்கே விளையாடிக்கொண்டிருந்தபோது, மகள் பெயர் யாழினி என்று அறிந்தார். நல்ல தமிழ் பெயர் என்று பாராட்டினார்...

ஆமாங்க, இப்பல்லாம் யார் நல்ல தமிழ் பெயர் வைக்கிறார்கள் ? ஆட்டையாம்பட்டியில இருக்கவன் நித்தின், சுஜித்னு வெக்கிறானுங்க..வட இந்திய மோகம்..என்றேன்..

அவர் மகள் அப்போது அருகில் வந்தாள்..

உங்க பொண்ணு பெயரை கேக்கவே இல்லையே..என்னங்க பெயர் என்றேன்..

கொஞ்சம் சங்கடத்தோடு ஒரு வட இந்திய பெயரை சொன்னார்..

அவ்வ்வ்..

அப்படி இப்படி பேசி சமாளித்தேன்...
பெண்ணியம் !!

ஸ்வீடனில் பெரும்பாலான அரசு அலுவலகங்கள்,  மருத்துவமனைகள், கடைகள் ஆகியவற்றில் பெண்கள். பெண்கள். பெண்களைத்தவிர வேறு யாரும் இருப்பதில்லை..அது பற்றி தனியாக ஆராய்ச்சி செய்யலாம்...

விஷயம் அதுவல்ல..

இப்படி ஒரு ட்வீட் போட்டிருந்தேன் என்னுடைய ட்விட்டர் அக்கவுண்ட்டில் (https://twitter.com/senth…

சோனியாவுக்கு மருத்துவ உதவி !! - அப்டேட் !!!

Image
கடந்த 2006 ஆம் ஆண்டு நான் வலைப்பதிவுக்கு நுழைந்த காலத்தில் மகாலட்சுமி என்ற பெண்ணுக்கு கல்வி உதவி கேட்டு வலைப்பதிவர்களை அணுகியிருந்தேன். மகாலட்சுமி ஒரு ஏழை / தலித் பெண், கல்லூரியை தொடர முடியாமல் (பணம் கட்ட இயலா சூழலில்) வெளியேறியிருந்தார்.

அவரை டீச்சர் ட்ரெயினிங் சேர்க்க கிட்டத்தட்ட ரூ 60 ஆயிரத்தை வலைப்பதிவர்கள் கொடுத்து உதவினார்கள்.....

அப்போதெல்லாம் பார்ப்பனர்கள், பார்ப்பனீயம் என்று ஜல்லியடித்துக்கொண்டிருந்தேன், ஆனால் அதிகமாக உதவியவர்கள் அவர்கள் தான் :) :)

இன்றைக்கு மகாலட்சுமி ஒரு ஆசிரியை !!

மேல்விவரங்களை இந்த பதிவில் படிக்கலாம் :

http://tvpravi.blogspot.in/2007/01/blog-post.html

இப்போது அதுபோன்றதொரு கோரிக்கையுடன் உங்களை அணுகுகிறேன். இந்தமுறை ஒரு ஏழைப்பெண்ணுக்கு மருத்துவ உதவி செய்ய !!!

திருவண்ணாமலையில் புனர்ஜீவன் அறக்கட்டளையை நடத்திவரும் திரு லூர்து அவர்கள் - 30 குழந்தைகளை புனர்ஜீவன் மூலம் படிக்க வைத்துவருகிறார்...அமெரிக்காவில் வாழ்ந்து வந்தவர் - இயேசு சபையை சேர்ந்தவர் - இந்த குழந்தைகளுக்காக திருவண்ணாமலையிலேயே தங்கிவிட்டார் !!

தற்போது இந்த முக்கியமான கோரிக்கையோடு அணுகியிருக்கிறார் !!